இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் தலா 68 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களம் கண்டது. ஆனால் அந்த அணி இறுதியில் 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. நெதர்லாந்து தரப்பில் சிறப்பாக விளையாடிய பாஸ்-டி-லீட் 68 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பைத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கியது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குற்த்து பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்,"இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான். முதலில் நாங்கள் நன்றாக பந்துவீசி பீல்டிங் செய்தோம். 2 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்தபோது வெற்றி பெறலாம் என்று நினைத்தோம். பாஸ் டி லீட் மூன்று துறையிலுல் அற்புதமாக செயலபட்டார்.
அவரது இன்னிங்ஸ் அற்புதமாக இருந்தது, அவருடன் ஒருவர் தேவைப்பட்டார், வான் பீக்கிடம் பேசவில்லை, அவர் எங்கே இருக்கிறார் என்று பார்க்க வேண்டும், இது ஒரு போட்டியாகும். அவர்களுக்கு நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதனால் நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த்தோம். அதுவே எங்களது தோல்விக்கு காரணமாக மாறியது” என்று தெரிவித்தார்.