ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: நான்காம் இடத்தில் நீடிக்கும் இந்தியா!

Updated: Thu, Dec 30 2021 21:35 IST
Image Source: Google

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியா இதுவரை 3 டெஸ்ட் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. இரண்டில் டிரா செய்துள்ளது. இதன்மூலம் 54 புள்ளிகள் பெற்றுள்ளது. 

இரண்டு புள்ளிகள் பெனால்டி மூலம் இழந்தது. வெற்றி சாராசரி 64.28 ஆகும். இதனால் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அதிக வெற்றி பெற்ற அணிகளில் முதல் இடம் பிடித்தாலும், தரவரிசையில் நான்காவது இடத்தையே பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 100 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இலங்கை 2 போட்டிகளில் வெற்றி பெற்று 100 சதவீதத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 36 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், 75 சதவீதத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 5ஆவது இடத்திலும், நியூசிலாந்து 6ஆவது இடத்திலும் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை