உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் மகுடம் சூடிய அஸ்வின்!

Updated: Thu, Jun 24 2021 20:20 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி அறிமுகப்படுத்தியது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதிப் பெற்றனர். 

இதையடுத்து இந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கிய இறுதிப் போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.  அவர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இச்சாதனையை படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் 70 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர் பிராட் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தையும், நியூசிலாந்தின் டிம் சௌதி 56 விக்கெட்களையும் எடுத்து நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

மேலும் இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியளில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,675 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை