நியூசிலாந்துடனான வெற்றி குறித்து டீன் எல்கர்!

Updated: Tue, Mar 01 2022 16:41 IST
Image Source: Google

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இந்த டெஸ்டில் மகத்தான முறையில் விளையாடி ஜெயித்துள்ளது. ஆட்ட நாயகன் விருது ரபாடாவுக்கும் தொடர் நாயகன் விருது நியூசிலாந்தின் மேட் ஹென்றிக்கும் வழங்கப்பட்டன. 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை தோல்வியடைந்ததேயில்லை. அந்தச் சாதனையை இந்தமுறையும் தக்கவைத்துள்ளது. 

இந்நிலையில் டெஸ்ட் வெற்றி பற்றி தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் கூறுகையில், “முதலில் பேட்டிங் செய்யவேண்டும் என்கிற முடிவு நல்லவேளை சரியாக அமைந்துவிட்டது. ஒருவேளை தவறாகவும் போயிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் நான் முட்டாளாகத் தெரிந்திருப்பேன். ஆனால் அணியின் நலனுக்காக எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பவன் நான். 

ஆடுகளம் நிதானமான தன்மை கொண்டதாகத் தெரிந்தது. ஆட்டம் செல்லச் செல்ல ஆடுகளம் வறண்டு, கால்தடங்கள் சுழற்பந்து வீச்சாளர் மஹாராஜுக்கு உதவியாக இருக்கும் என எண்ணினோம். கடைசியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது, சுழற்பந்து வீச்சாளரை விளையாட வைத்தது போன்ற முடிவுகள் சரியாக அமைந்தன. 

கடைசி நாளின் கடைசிப் பகுதியில் மழை வந்தது எரிச்சலை ஏற்படுத்தியது. விரைவில் மழை அகன்று விடும் எனத் தெரிந்தாலும் ஒருவேளை மழை தொடர்ந்து பெய்தால் என்ன செய்வது என்றும் நினைக்கத் தோன்றியது” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை