டி20 உலகக்கோப்பை: இந்த அணிதான் சாம்பியன் - கெவின் பீட்டர்சன் கணிப்பு!
டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும் வேட்கையில் இருப்பதாலும் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது துபாயை பொறுத்தமட்டில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த உலக கோப்பை தொடரில் துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் 2வதாக பேட்டிங் ஆடிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் டாஸ் மிக முக்கியம்.
இந்நிலையில், நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இதுகுறித்து பேசிய கெவின் பீட்டர்சன், “நியூசிலாந்து அணி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. அணியின் அனைத்து விஷயங்களும் கவர் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும். ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிய 2015 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தான் உலக கோப்பையை வென்றது. எனவே நாளை ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை தூக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.