WPL 2023: வொல்வார்ட் காட்டடி; ஆர்சிபிக்கு 189 டார்கெட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 16ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு சோபி டங்க்லி - லாரா வோல்வார்ட் தொடக்கம் தந்தனர். இதில் டங்க்லில் 16 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வோல்வார்ட் - மேகனா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் மேகனா 31 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய வோல்வார்ட் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக ஆஷ்லே கார்ட்னரும் அதிரடி காட்ட அண்யின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்களை என 68 ரன்களை அடித்திருந்த வோல்வார்ட் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து 6 பவுண்டரி, 1 சிக்சர் என 41 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஹர்லீன் தியோல் - ஹேமலதா ஆகியோர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காம இருந்த ஹேமலதா 16 ரன்களையும், ஹர்லீன் 12 ரன்களையும் சேர்த்திருந்தனர்.