WTC final: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!

Updated: Sun, Jun 20 2021 20:37 IST
Image Source: Google

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்ப்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2ஆவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்து.

3ஆம் நாள் ஆட்டம்  இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ரன்களில் வெளியேறினார்.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 200 ரன்களை எட்டவே இந்திய அணி கடும் பாடுபட்டது. 92.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார்.  

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்கிறது.

இதையடுத்து அந்த அணியின் டேவன் கான்வே - டாம் லேதம் இணை நிதான அட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையில் 36 ரன்களை எடுத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை