ஷார்ட் பிட்ச் பந்துகளில் ரஹானே உஷாராக இருக்க வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்

Updated: Mon, Jun 21 2021 19:30 IST
Image Source: Google

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து  இந்திய அணி, 149 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையிலிருந்து, 217 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்தார். கோலியும் ரஹானேவும் ஆடியவரை இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் கோலி 44 ரன்னிலும், ரஹானே 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்து, 217 ரன்களுக்கு சுருண்டது.

கோலி ஆட்டமிழந்தபிறகும், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேவை அருமையாக பிளான் செய்து வீழ்த்தினார் கேன் வில்லியம்சன். ரஹானே 49 ரன்களை எட்டிய நிலையில், பவுலர் நீல் வாக்னரிடம் சென்று பேசிவிட்டு, ஒரு ஃபீல்டரை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்தினார் கேன் வில்லியம்சன். அதற்கடுத்த பந்தை நீல் வாக்னர் ஷார்ட் பிட்ச் பந்தாக வீச, அதை சரியாக அந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து ரஹானே ஆட்டமிழந்தார். 

ரஹானே ஷார்ட்பிட்ச் பந்து வீசினால் ஹூக் ஷாட் ஆடுவார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு அந்த திசையில் ஃபீல்டரை நிறுத்தி ஷார்ட் பிட்ச் பந்தை வீசவைத்து வலைவிரித்தார் வில்லியம்சன். அவர் நினைத்தபடியே அந்த வலையில் ரஹானே விழுந்தார். 

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் விவிஎஸ் லகக்ஷ்மண், “கேன் வில்லியம்சன் கேப்டன்சி ஒவ்வொரு முறையும் என்னை கவர்கிறது. கிறிஸ்ட்சர்ச்சில் ரஹானேவிற்கு எதிராக பயன்படுத்திய அதே உத்தியைத்தான் நியூசிலாந்து இந்த போட்டியிலும் செயல்படுத்தியது. வில்லியம்சன் நீல் வாக்னருடன் சென்று பேசினார். அதற்கு முன்பு வரை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டர் இல்லை. வில்லியம்சன் வாக்னருடன் பேசிய பின்னர் தான், அங்கு ஃபீல்டர் நிறுத்தப்பட்டார். 

ஷார்ட் பிட்ச் பந்தில் ரஹானே கம்பல்சிவ் புல் ஷாட் ஆடுவார் என்று தெரிந்தே அங்கு ஃபீல்டர் நிறுத்தப்பட்டு ரஹானே வீழ்த்தப்பட்டார். ரஹானேவும் அதிருப்தியடையந்திருப்பார். அவர் இனியாவது ஷார்ட் பிட்ச் பந்துகளில் உஷாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை