ENG vs SA, 3rd Test: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!

Updated: Tue, Sep 13 2022 09:00 IST
Image Source: Google

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  விளையாடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் புள்ளி பட்டியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின் 75 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக தக்கவைத்த தென் ஆப்பிரிக்க அணி, 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் வெற்றி சதவிகிதம் 75லிருந்து 66.67 சதவிகிதமாக குறைந்தது.

இதையடுத்து புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்திற்கு பின் தங்கியது தென் ஆப்பிரிக்க அணி. இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டிலும் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 66.67 சதவிகிதத்திலிருந்து 60 ஆக குறைந்துவிட்டது. 

இலங்கை அணி 53.33 சதவிகிதத்துடன் 3ஆம் இடத்திலும், இந்திய அணி 52.08 சதவிகிதத்துடன் 4ஆம் இடத்திலும் உள்ள நிலையில், இலங்கை, இந்தியா அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று, தென் ஆப்பிரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா இழக்கும். 

மேலும் இப்பட்டியளில் 5 முதல் 8ஆம் இடங்கள் வரை முறையே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை