ஒலிம்பிக்கிலிருந்து விலகிய வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!

Updated: Fri, Jul 30 2021 11:52 IST
Image Source: Google

கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனநிலை சரியில்லாத காரணத்தால் 2 தலைசிறந்த வீராங்கனைகள் தொடரை விட்டு வெளியேறியது பரபரப்பை கிளப்பியது.

அதில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுபவர் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். இவர் இதுவரை 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உலகின் தலைசிறந்த வீராங்கனை. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் இருந்து திடீரென வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தனக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாகவும், மருத்துவப் பரிசோதனை செய்யவிருப்பதாகவும் கூறி அவர் வெளியேறினார். இந்தாண்டு அவர் 13.766 என்ற தனது ஒலிம்பிக் வாழ்க்கையின் மிகக் குறைந்த புள்ளிகள் பெற்ற பிறகு பைல்ஸ் அரங்கிலிருந்து வெளியேறினார்.

இதே போல ஜப்பானின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகாவும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து திடீரெனெ வெளியேறினார். அவரும் மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினார். கடந்த ஒரு வருடமாகவே மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு இது முதல் ஒலிம்பிக் ஆகும். 

நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். எல்லா தோல்விக்கு பின்பும் நான் கலங்குவது இயல்பு. ஆனால் இந்த தோல்வி மிக மோசமானதாக இருக்கிறது. நான் திட்டமிட்ட எதுவும் சரியாக நடக்கவில்லை. எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலிருந்து விலகிய பிறகு இவர்கள் இருவரின் பெயர்களும் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவிசாஸ்திரி ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மனநிலையை சரிசெய்துகொள்ள போதுமான காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் சிமோன். இந்த சிறுவயதில் நீங்கள் பலவற்றை சாதித்துவிட்டீர்கள். 48 மணி நேரம் அல்லது 48 நாட்கள் கூட ஆகலாம். ஆனால் ஓய்வை எடுத்துக்கொள்ளுங்கள் யாருக்கும் எதற்காகவும் நீங்கள் விளக்கம் தர தேவையில்லை. நயோமி ஒசாகாவுக்கும் இதையே தான் சொல்ல விரும்புகிறேன். உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை