ZIM vs BAN, Only test: லிட்டன் தன், மஹ்மதுல்லா அதிரடியில் வலிமையான நிலையில் வங்கதேசம்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரேஒரு டெஸ்ட் போட்டி இன்று ஹாராரேவில் தொடங்கியாது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் சாய்ஃப் ஹசன் ரன் ஏதுமின்றியும், ஷாதம் இஸ்லாம் 23 ரன்களிலும், நஜிபுல் ஹொசைன் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் கேப்டன் மொமினுல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 70 ரன்களில் மொமினுல் ஹக் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 95 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய மஹ்மதுல்லா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அரைசதம் கடந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களைச் சேர்த்தது.
ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளசிங் முசராபானி 3 விக்கெட்டுகளையும், டிரிபனோ, விக்டர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வங்கதேச அணி தரப்பில் மஹ்மதுல்லா 54 ரன்களுடனும், டஸ்கின் அஹ்மத் 13 ரன்களுடனும் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.