உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளை நடத்தும் ஜிம்பாப்வே!
மகளிர் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 04 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இத்தொடரைக் கருத்தில் கொண்டு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.
மேலும் இத்தொடருக்கான தகுதிச்சுற்று அடிப்படையிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அதில் முன்னிலைப் பெறும் அணிகள் நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறும்.
மீதமுள்ள அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறும். அதன்படி இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நடத்த ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவர் தவெங்வா முகுஹ்லானி, “ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளை நடத்த அனுமதி வழங்கிய ஐசிசிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் ஜிம்பாப்வேயில் நடைபெறும் இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இந்தாண்டு நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.