இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே!

Updated: Tue, Aug 15 2023 20:59 IST
Image Source: Google

உலக கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே அணியின் பங்கு முக்கியமானது. ஆப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வே சர்வதேச கிரிக்கெட்டில் படம் வாய்ந்த அணியாக விளங்கி வந்தது . அந்த நாட்டில் நிலவிய பொருளாதார சிக்கல் மற்றும் அரசியல் காரணங்களால் கிரிக்கெட்டின் வளர்ச்சி மெதுவாக சரிய தொடங்கியது. 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்று வரை தகுதி பெற்ற ஜிம்பாப்வே அணி ஆன்ட்டி ஃபிளவர், கிரான்ட் ஃப்ளவர், அலிஸ்டர் கேம்பல் போன்ற சிறந்த வீரர்களை கிரிக்கெட் உலகத்திற்கு வழங்கியது.

ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணியாக விளங்கிய ஜிம்பாவே 90 களின் இறுதியில் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தது . தற்போதும் அந்த அணி மிகச் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது . சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை காண தகுதி சுற்று போட்டிகளில் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்து ஒருநாள் உலகக் கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு உற்சாக வழங்கும் ஒரு செயலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்திருக்கிறது. அந்த செயலின் காரணமாக 22 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது ஜிம்பாவே அணி. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஜிம்பாப்வே . அந்தத் தொடரில் தான் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகபந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுக வீரராக களம் கண்டார்.

இன்று உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக 700 டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்படி 2025 ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை நடைபெறும் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி இங்கிலாந்து எதிர்த்து இங்கிலாந்து நாட்டில் வைத்து விளையாட இருக்கிறது.

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை