ZIM vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துமுடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இந்தியா
- இடம் - ஹராரே கிரிக்கெட் மைதாம், ஹராரே.
- நேரம் - மதியம் 12.45 (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. அதிலும் இத்தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாகவும் அமைந்துள்ளது.
ஆனாலும் இதில் ஷிகர் தவான், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர களமிறங்கிய கேஎல் ராகுல், இஷான் கிஷான், தீபக் ஹூடா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருப்பது பெரும் கவலையை தரும் விசயமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பந்துவீச்சில் தீபக் சாஹார், பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் என அனைவரும் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் மறுமுனையில் ஜிம்பாப்வே அணி தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் கடந்த போட்டியில் பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அணியின் நட்சத்திர வீரர்கள் சிக்கந்தர் ரஸா, இன்னசெண்ட் கையா, வெஸ்லி மதவெரே ஆகியோர் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் நாளை நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆறுதல் வெற்றியையாவது பதிவுசெய்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 65
- ஜிம்பாப்வே வெற்றி - 10
- இந்திய அணி - 53
- முடிவில்லை - 2
உத்தேச அணி
ஜிம்பாப்வே - தடிவானாஷே மருமானி, இன்னசென்ட் கையா, சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகாப்வா (கே), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியாச்சி, ரிச்சர்ட் நகரவா
இந்தியா - கேஎல் ராகுல் (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல்/ஷாபாஸ் அகமது, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்/அவேஷ் கான்.
பேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
- பேட்டர்ஸ் - ஷுப்மான் கில், ஷிகர் தவான், ரியான் பர்ல்
- ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, தீபக் ஹூடா
- பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், லூக் ஜாங்வே, முகமது சிராஜ்