இன்றுடன் ஓய்வு பெறுகிறார் பிரெண்டன் டெய்லர்!

Updated: Mon, Sep 13 2021 13:03 IST
Image Source: Google

கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தவர் பிரெண்டன் டெய்லர். 

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஜிம்பாப்வே அணிக்காக 202 போட்டிகளில் 6,677 ரன்களை எடுத்து, அதிக ரன்களை எடுத்த 2ஆவது ஜிம்பாப்வே வீரர் எனும் பெருமைக்கும் இவர் சொந்தக்காரர்.

அதேபோல் 34 டெஸ்ட் போட்டிகளில் 2,320 ரன்களையும், 45 டி20 சர்வதேச போட்டிகளில் 934 ரன்களையும் பிரெண்டன் டெய்லர் அடித்துள்ளார். இந்நிலையில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்பே அணியிலும் டெய்லர் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டி முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரெண்டன் டெய்லர் அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து பிரெண்டன் டெய்லர் கூறும்போது, “என் தாய்நாட்டுக்காக நான் ஆடும் கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது, இத்துடன் ஓய்வு பெறுகிறேன், கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். 17 ஆண்டுகள் உச்சமும் தாழ்வும் உள்ள கரியர், உலகிற்காக நான் இதை மாற்ற முடியாது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கிரிக்கெட் எனக்கு எளிமையைக் கற்றுக் கொடுத்தது. அணியை நல்ல நிலையில் இருத்த வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்துள்ளது. 2004ஆம் ஆண்டு அணியில் வரும்போது அந்த எண்ணத்தில்தான் வந்தேன் இப்போது அதை நிறைவேற்றியதாகவே கருதுகிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை