டி20 உலகக்கோப்பை: கத்துக்குட்டி அணி தானே என்று நினைத்து கோட்டை விட்ட ஜாம்பாவன் அணிகள்!

Updated: Mon, Oct 18 2021 13:03 IST
Top Five Great Upsets In T20 World Cup (Image Source: Google)

ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் நோற்று முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி தற்போது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என ஜாம்வான் அணிகளை வீழ்த்தியுள்ள வங்கதேச அணியை, ஸ்காட்லாந்து அணி வீழ்த்தி அனைவரையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியது தன் அந்த சம்பவம். 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இதுபோன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஐந்து போட்டிகள் குறித்த பதிவை இத்தொகுப்பில் காண்போம்.

நெதர்லாந்து - இங்கிலாந்து - 2009

கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், நெதர்லாந்தும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. 

அதனால் அப்போட்டியில் இங்கிலாந்து நிச்சயம் வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்து அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது. 

அதேபோல், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் இங்கிலாந்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா - 2007

டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அத்யாயத்தின் நான்காவது போட்டியில் ஜிம்பாப்வே - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

அதன்பின் இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி பிராண்டன் டெய்லரின் அசத்தலான அரைசதத்தின் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மேலும் அந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் - 2016

கடந்த சீசன் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 123 ரன்களையே இலக்காக நிர்ணயித்திருந்தது. 

எப்படியும் வெஸ்ட் இண்டீஸ் 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது நபி, ரஷித் கான் ஆகியோரது அபார பந்துவீச்சினால் 4 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைத் தழுவியது. 

இருப்பினும், அந்த சீசனில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

ஹாங்காங் - வங்கதேசம் - 2014

டி20 உலகக்கோப்பையில் அறிமுக அணியாக களமிறங்கிய ஹாங்காங் அணி, யாரும் எதிர்பாராத வகையில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. மேலும் அப்போட்டிக்கு முன்னதாக அந்த அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியிடம் படு தோல்வியைச் சந்தித்திருந்தது. 

ஆனாலும் அடுத்தப் போட்டியிலேயே 2 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஹாங்காங் அணி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. 

ஸ்காட்லாந்து - வங்கதேசம் - 2021

நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதனை அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோல்வியைத் தழுவியது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை