ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 11ஆவது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் 22ஆம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 24ஆம் நிலை வீராங்கனையும் இரு முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றவருமான பெல்லாரசின் விக்டோரியா அசரங்காவை எதிர்த்து விளையாடினார்.

Advertisement

ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எலெனா ரைபகினா 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் எலெனா ரைபகினா, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 3ஆவது சுற்றை கடந்தது இல்லை. 

Advertisement

இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் 5ஆம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் எலெனா ரைபகினா. சபலெங்கா, அரை இறுதி சுற்றில் போலந்தின் மக்டா லினெட்டுடன் மோதினார். 

இதில் சபலெங்கா 7-6 (7-1), 6-2 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். 24 வயதான சபலெங்கா கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னர் அவர், விம்பிள்டனில் ஒரு முறையும், அமெரிக்க ஓபனில் இரு முறையும் அரை இறுதி சுற்று வரை சென்றுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News