பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Advertisement

இந்த தரவரிசைப் பட்டியளில் இந்தியவைச் சேர்ந்த இளம் வீரர் லக்‌ஷயா சென் ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் லக்‌ஷயா சென் தனது கெரியரின் சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி இணை தொடர்ந்து எட்டாவது இடத்தில் நீடித்து வருகின்றனர். மற்றொரு இந்திய ஜோடியான எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 2 இடம் முன்னேறி 21ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி தொடர்ந்து நம்பர் ஒன் வீராங்கனையாக வலம் வருகிறார். அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தொடர்ந்து 6ஆவது இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News