இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் கார்டிஃபில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 5 அறிமுக வீரர்களையும் களமிறக்கினார்.
அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி சோயிப் மஹ்மூதின் அபார பந்துவீச்சால் 35.2 ஓவர்களில் 141 ரன்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 47 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் மஹ்மூத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 21.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதில் டேவிட் மலான் 68 ரன்களும், ஸாக் கிரௌலி 58 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்: