
Zimbabwe vs New Zealand 1st Test Dream11 Prediction: நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், கிளென் பிலீப்ஸ் உள்ளிட்டோர் இல்லாதது பெரும் பலவீனமாக பார்க்கப்பட்டாலும் மேத்யூ ஃபிஷர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அணியின் பேட்டிங் வலிமையை கூட்டியுள்ளது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி சமீபத்தியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ZIM vs NZ 1st Test Match Details
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து
- இடம் - குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- நேரம்- ஜூலை 31, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)