வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை சேர்த்தது. இதில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசிக்கட்டத்தில் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. இதனால்16 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி