
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அதன்படி புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
வங்கதேசம்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), மஹ்முதுல்லா, முஷ்பிக்கூர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பாட் கம்மின்ஸ்(கே), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.