1-lg.jpg)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற சூழலில் டாஸ் வென்ற அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதிக்கு மாற்றாக லோக்கி ஃபர்குசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இலங்கை அணியில் கசுன் ரஜிதாவுக்கு பதிலாக சமிகா கருணரத்னேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, டில்ஷான் மதுஷங்க
நியூசிலாந்து: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன்(கே), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், டிம் சௌதீ, டிரென்ட் போல்ட், லோக்கி ஃபெர்குசன்