Advertisement
Advertisement

Alick athanaze

WI vs ENG, 1st ODI: ஷாய் ஹோப் அசத்தல் சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
Image Source: Google

WI vs ENG, 1st ODI: ஷாய் ஹோப் அசத்தல் சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!

By Bharathi Kannan December 04, 2023 • 09:52 AM View: 195

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஜேக்ஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிலிப் சால்ட் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த பென் டக்கெட்டும் 20 ரன்களில் நடையைக் கட்டினார். 

Related Cricket News on Alick athanaze