Deepak chahar marriage
காதலியை கரம்பிடிக்கும் தீபக் சஹார்; வைரலாகும் அழைப்பிதழ்!
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர். ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான தீபக் சாஹர், இந்திய அணிக்காக 7 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரராக திகழும் தீபக் சாஹர் 63 போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் பணியை செவ்வனே செய்துவந்த தீபக் சாஹரை, 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடி என்ற பெரும் தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி.
ஆனால் காயம் காரணமாக ஐபிஎல் 15ஆவது சீசன் முழுக்க தீபக் சாஹர் ஆடவில்லை. இன்னும் 2 மாதங்களுக்கு அவர் ஆடமுடியாது. இந்நிலையில், தீபக் சாஹர் அவரது காதலி ஜெயாவை வரும் ஜூன் 1ஆம் தேதி திருமணம் செய்கிறார்.
Related Cricket News on Deepak chahar marriage
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47