Gujarat giants women
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் நியமனம்!
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Gujarat giants women
-
WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து அணிகளின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
WPL 2025: அணிகள் தக்கவைத்த மற்ற விடுவித்த வீராங்கனைகளின் முழு பட்டியல்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கானைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
எங்ளது தேர்வில் லாரா வோல்வார்ட் உள்ளார் - பெத் மூனி!
அடுத்தடுத்த போட்டிகளுக்கான தேர்வில் லாரா வோல்வார்ட் எங்கள் அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் பெத் மூனி தெரிவித்துள்ளார். ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்!
டபிள்யூபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனில் விளையாடும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47