Hardik pandya
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
அந்த வகையில் நேற்று 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது.
Related Cricket News on Hardik pandya
-
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் ரூ. 15 கோடி வரை கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ...
-
ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் விளையாடுவார் என தோன்றுகிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
ரோஹித் சர்மா இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட விடுவார் என்ற வேடிக்கையான உணர்வு எனக்கு தோன்றுகிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா!
குழந்தையாக இருக்கும்போது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது - ஹர்திக் பாண்டியா உருக்கம்!
உலகக் கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களை நான் இழக்கக்கூடும் என்கின்ற உண்மையை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உருக்கமாக பதிவிட்டுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா; பிரஷித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!
சிகிச்சை முடிந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்தே விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!
காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையில் உள்ள ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை, தென் ஆப்பிரிக்க போட்டிகளையும் தவறவிடும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார். ...
-
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்!
உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்தால் அவதிபடும் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த இந்திய வீர்ர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
நாக் அவுட் போட்டிகள் காத்திருப்பதால் முழுமையாக 100% பாண்டியா குணமடையாமல் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. ...
-
என்சிஏவிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா; இந்திய அணிக்கு பின்னடைவு!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்சிகிச்சைகாக என்சிஏவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24