Hope india
ஜான் காம்பெல், ஷாய் ஹோப் அரைசதம்; சரிவிலிருந்து மீளும் வெஸ்ட் இண்டீஸ் அணி!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்மன் கில் 129 ரன்களையும், சாய் சுதர்ஷன் 87 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான் காம்பெல் 10 ரன்னிலும், டெகநரைன் சந்தர்பால் 34 ரன்னிலும், அலிக் அதனாஸ் 41 ரன்னிலும், ஷாய் ஹோப் 36 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய விரர்களில் டெவின் இமளாக் 21 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 17 ரன்னிலும், காரி பியர் 23 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டர்சன் பிலிப் 24 ரன்களையும் சேர்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது.
Related Cricket News on Hope india
-
பைல்ஸை மட்டும் தட்டிய தூக்கிய வைபவ் அரோரா; ஷாக் ஆகி நின்ற ஷாய் ஹோப் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஷாய் ஹோப் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய மெக்குர்க்; மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
ஒரு போட்டியில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். மற்றொரு போட்டியில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் வெல்வோம் - ஷாய் ஹோப்!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்றதை போல், 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுவோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது விண்டீஸ்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நாம் கவனத்தை செலுத்தினால் நிச்சயமாக அவர்கள் பலம் வாய்ந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்வார்கள் என்று அந்த அணியின் ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நூறாவது போட்டியில் சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்!
தனது நூறாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷாய் ஹோப், 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். ...
-
WI vs IND, 2nd ODI: ஹோப் சதம், பூரன் அரைசதம்; இந்தியாவுக்கு 312 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47