Advertisement
Advertisement
Advertisement

India u19

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
Image Source: Google
Advertisement

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!

By Bharathi Kannan August 31, 2024 • 11:49 AM View: 85

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அண்டர்19 கிரிக்கெட் அணியானது இந்திய அண்டர்19 அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இரண்டு நான்கு நாள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது செப்டம்பர் 21ஆம் தேதியும், நான்கு நாள் தொடரானது செப்டம்பர் 30ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. 

மேலும் இத்தொடரின் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் புதுச்சேரியிலும், நான்கு நாள் போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான இந்திய அண்டர் 19அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அத்னபடி, உத்திரபிரதேச வீரர் முகமது அமான் ஒருநாள் அணிக்கும், மத்தியபிரதேச வீரர் சோஹம் பட்வர்தன் நான்கு நாள் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Related Cricket News on India u19