Italy cricket
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐரோப்பிய தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இத்தாலி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பென் மனெட்டி 30 ரன்களையும், ஸ்டூவர்ட் 25 ரன்களையும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் வாண்டர் மெர்வ் 3 விக்கெட்டுகளையும், கைல் கெலின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் மைக்கேல் லெவ்விட் 34 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் ஓடவுட் 47 ரன்களையும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Related Cricket News on Italy cricket
-
இரு வேறு நாடுகளுக்காக சதமடித்து தனித்து சாதனை பட்டியலில் இணைந்த ஜோ பர்ன்ஸ்
ருமேனியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இத்தாலி அணிக்காக சதமடித்து அசத்திய ஜோ பர்ன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47