Jos buttler
WI vs ENG: ஜோஸ் பட்லர் குறித்து வெளியான தகவல்; டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளனர்.
இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Jos buttler
-
இது எனக்கு நம்பமுடியாத பெருமையான விஷயம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள லியாம் லிவிங்ஸ்டோன், முதல் முறையாக அணியை வழிநடத்தவுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜோஸ் பட்லர் விலகிய நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பட்லர், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லரை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஸ் பட்லர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs AUS: ஒருநாள் தொடரில் இருந்தும் பட்லர் விலகல்; கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து, அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸி தொடரில் இருந்து கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு; மாற்று வீரராக ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த கஸ் அட்கின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மற்று வீரராக ஒல்லி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்; பில் சால்ட் கேப்டனாக நியமனம்!
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் பிராண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs AUS: காயத்தால் அவதிப்படும் ஜோஸ் பட்லர்; இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு!
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மூத்த வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து நீக்கியுள்ளது. ...
-
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் 7 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24