Lucknow super giants
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது சமீபத்தில்சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாகவும் ரிஷப் பந்த் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
Related Cricket News on Lucknow super giants
-
ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் உருக்கமான பதிவு!
ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, அவர் முன்பு விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பரத் ஜிண்டல் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து விலகும் கேஎல் ராகுல்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரு வீரருக்காக 50% தொகையை செலவிட முடியாது - சஞ்சீவ் கொயங்கா !
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னாதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரோஹித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியான நிலையில், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஜாகீர் கானை ஆலோசகராக நியமித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்கள் அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்கள் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
எதிர்வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் தங்கள் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து விலகும் கேஎல் ராகுல்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லக்னோ அணி கேப்டன் & உரிமையாளர் - வைரலாகும் புகைப்படம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் சஞ்சிவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகும் கேஎல் ராகுல்?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ...
-
இந்த சீசனில் மயங்க் யாதவ் இனி விளையாடமாட்டார் - ஜஸ்டின் லங்கர்!
காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், இந்த சீசனில் இனி விளையாடமாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் மயங்க் யாதவ்?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!
மயங்க் யாதவைப் தனது அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிராக புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் லக்னோ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது புதிய ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24