Advertisement
Advertisement

Shweta sehrawat

WPL 2024: யுபி வாரியர்ஸை 119 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
Image Source: Google

WPL 2024: யுபி வாரியர்ஸை 119 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

By Bharathi Kannan February 26, 2024 • 21:09 PM View: 117

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய யுபி அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - வ்ருந்தா தினேஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் வ்ருந்தா அரவிந்த் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை தஹ்லியா மெக்ராத்தும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் அலிசா ஹீலியும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, யுபி அணி 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 

Related Cricket News on Shweta sehrawat