Advertisement
Advertisement
Advertisement

T20i

WI vs SA, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீ
Image Source: Google
Advertisement

WI vs SA, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!

By Bharathi Kannan August 24, 2024 • 08:57 AM View: 68

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்பின் களமிறக்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். 

Advertisement

Related Cricket News on T20i