Top 5 cricket news
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
1. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 64 ரன்களையும், ஹாரி புரூக் 53 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
2. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 179 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.
Related Cricket News on Top 5 cricket news
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47