Tristan stubbs
ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி ஏபிடி-யை கண் முன் நிறுத்திய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் 2024இல் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், டிரினிபாகோ நைட் ரைடர்ஸ் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொண்டது, இதில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்படி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 250 ரன்களை குவிக்க, அதனைத்து துரத்திய செயின்ட் கிட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 206 ரன்களை மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியானது இப்போட்டியில் நிலைத்திருக்க ஒரு அட்டகாசமான தொடக்கம் தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் முதல் இரண்டு விக்கெட்டுகளை 18 ரன்களுக்கு இழந்தனர். இதன் பின்னர், எவின் லூயிஸ் மற்றும் மைக்கேல் லூயிஸ் ஆகியோர் அணியின் ரன் விகிதத்தை அதிகரிக்க முயன்றனர் ஆனால் லூயிஸ் 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர் மைக்கேல் லூயிஸுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Related Cricket News on Tristan stubbs
-
WI vs SA, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: டேவிட் மில்லர் அதிரடியில் நெதர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி அணிக்கு பயத்தை காட்டிய அர்ஷத் கான்; சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ...
-
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி ஃபினிஷிங்; லக்னோ அணிக்கு 209 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
4,4,6,4,4,4 - ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி விளாசிய ஸ்டப்ஸ் - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய மெக்குர்க்; மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்!
நாங்கள் மிகக்குறைந்த இலக்கையே துரத்துவதன் காரணமாக இப்போட்டியை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க முடிவு செய்தோம் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை பந்தாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டெத்-ஓவர் பந்துவீச்சு, எங்கள் பேட்டிங் ஆகியவற்றில் நாங்கள் மேம்பட வேண்டும் - ரிஷப் பந்த்!
பவர்பிளேயில் எங்களிடம் இருந்து போதுமான ரன்கள் வரவில்லை. குறிப்பாக நீங்கள் இவ்வளவு பெரிய ஸ்கோரைத் துரத்தும்போது பவர்பிளே ஓவர்களில் நீங்கள் ரன்களை குவிப்பது மிக முக்கியமான ஒன்றாகும் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை எஸ்ஏ20 தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24