Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Umran malik

வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
Image Source: Google

வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!

By Bharathi Kannan February 28, 2024 • 20:19 PM View: 96

பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டு தோரும் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வழங்குவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏ+ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடி ரூபாயும், ஏ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. ஒரு கோடி ரூபையையும் பிசிசிஐ ஊதியமாக வழங்கி வருகிறது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் கிரேடில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Cricket News on Umran malik