இந்த போட்டியில் 10 - 15 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Sat, Apr 20 2024 10:55 IST
இந்த போட்டியில் 10 - 15 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலிலும் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்தன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும், மொயீன் அலி 30 ரன்களையும், இறுதியில் களமிறங்கி அதிரடி காட்டிய மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ரகுல் - குயின்டன் டி காக் இணை  அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின், டி காக் 54 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 82 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், நிக்கோலஸ் பூரன் 23 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சிஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இதற்கு மேல் சிறப்பாக செயல்படும்படி பேட்டர்களிடம் என்னால் கேட்க முடியாது. பவர் பிளேவிற்கு பிறகு நல்ல தொடக்கம் கிடைத்தும் மிடில் ஓவர்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய எங்களால் ரன் குவிப்பிற்கு செல்ல முடியவில்லை. இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம். 

இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் எப்போதுமே போட்டிக்கு 20 ரன்கள் வரை கூடுதலாக தேவை. இது போன்ற மைதானத்தில் தொடங்குவதற்கு மந்தமானதாகத் தோன்றினாலும், பனியின் தக்கம் இருக்கும் என்பதால் இங்கு 190 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். அது தவிர்த்து இத்தொடரின் பவர்பிளேயில் விக்கெட்டுகளை எடுப்பதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் அடுத்த மூன்று போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் அதற்காக தயாராகவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை