இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இராண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி 31 ரன்களில் ஆடமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அதிரடி காட்டிய பென் டக்கெட் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து வந்த ஜோ ரூட்டும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் , ஜஸ்ப்ரித் பும்ராவின் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.  இதையடுத்து களமிறங்கிய ஒல்லி போப் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதில் அபாரமாக விளையாடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தியதுடன் ஆட்டமிழக்காமல் 148 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்களுக்குள்ளாவே இந்திய அணி சுருட்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் இங்கிலாந்து அணியை 150 ரன்களுக்குள் இந்திய அணி கட்டுப்படுத்தும் என நம்புகிறேன். ஆனால் நாங்காவது இன்னிங்ஸில் அந்த ரன்னை துரத்துவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஏனெனில் நான்காவது இன்னிங்ஸில் நீங்கள் விளையாடும் போது மைதானத்தின் தன்மை முழுவதுமாக மாறி, அணியின் முக்கிய வீரர்கள் கூட விரைவில் ஆட்டமிழக்க கூடும். இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசைக் கொண்டிருந்தாலும், நீங்கள் இங்கிலாந்து அணியை எவ்வளவு விரைவில் கட்டுப்படுத்துகிறீர்களோ அவ்வளவு எளிதாக அணியின் வெற்றியும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News