இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில்,  டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா, திமுத் கருனரத்னே, ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தினேஷ் சண்டிமால் 30 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ்  36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.  பின்னர் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய குசால் மெண்டிஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 50 ரன்களை எடுத்த நிலையில் குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரமேஷ் மெண்டிஸ் 14 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் இலங்கை அணி 305 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை தொடக்க கொடுத்தனர். இதில் டெவான் கான்வே 17 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் லேதமுடன் இணைந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதம் 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேன் வில்லியம்சனும் 55 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இணையும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டேரில் மிட்செல் 41 ரன்களுடனும், டாம் பிளெண்டல் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 50 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி நாள் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News