BANA vs INDA: ஈஸ்வரன், ஜெய்ஷ்வால் அபாரம்; இந்தியா முன்னிலை!

Updated: Tue, Nov 29 2022 20:56 IST
1st unofficial Test: Saurabh, Saini, openers put India A in control against Bangladesh A (Image Source: Google)

டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. 

இதில் இன்று தொடங்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

நஜ்முல் ஹொசைன் ஷான்டோ மட்டும் தாக்குப்பிடித்து 19 ரன்களை சேர்த்தார். அடுத்து, 7ஆவது இடத்தில் களமிறங்கிய மொசக்தேக் ஹோசைன் 63 ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியதால், வங்கதேச அணி 112/10 ரன்களை சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இதனால் வங்கதேச ஏ அணி, 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம்பெற முடியாமல் போனால் அவருக்குப் பதிலாக விளையாடவுள்ள 29 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செளரப் குமார் 4 விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெயஷ்வால், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக விளையாடி அசத்தினார்கள். இதில் இருவரும் அரைசதம் அடிக்க, அணியின் முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது.

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வின் ஜெய்ஷ்வால் 61, அபிமன்யூ ஈஸ்வரன் 53 ஆகியோர் அரைசதம் கடந்து களத்தில் இருக்கிறார்கள். இதையடுத்து 8 ரன்கள் முன்னிலையும் நாளை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை