ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 25 ரன்களையும், ரஹ்மத் ஷா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா மற்றும் நியூமன் நியாம்ஹுரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிளெஸ்ஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், அஹ்மத்ஸாய் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதனையடுத்து 85 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தன் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல் மாலிக் ஒரு ரன்னிலும், ரியாஸ் ஹசன் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்களை மட்டுமே எடுத்தது.  இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ரஹ்மத் ஷா 18 ரன்களுடனும், ஸியா உர் ரஹ்மான் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். 

இதில் ரஹ்மத் ஷா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் ஸியா உர் ரஹ்மான் 6 ரன்னிலும், அஃப்சர் ஸஸாய் 5 ரன்னிலும், ஷஹிதுல்லா கமல் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ரஹ்மத் ஷாவுடன் இணைந்த இஸ்மத் ஆலமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரஹ்மத் ஷா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 14 பவுண்டரிகளுடன் 139 ரன்களைச் சேர்த்திருந்த ரஹ்மத் ஷா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய இஸ்மத் ஆலம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களைக் குவித்துள்ளது. இதில் இஸ்மத் ஆலம் 64 ரன்களுடனும், ரஷித் கான் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முஸரபானி 4 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் ந்ங்கரவா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 205 ரன்கள் முன்னிலையுடன் ஆஃப்கானிஸ்தான் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News