டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் மூன்று பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு?

Updated: Fri, Oct 08 2021 19:28 IST
Image Source: Google

ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. அடுத்து பிளே ஆஃப் சுற்று மட்டுமே எஞ்சியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 17ஆம் தேதிமுதல் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது.

இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள்.

ஹார்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பௌலிங்கில் உதவுவார். இவரால் மிடில் ஆர்டர் பலம் பெரும் என்ற காரணத்தினால்தான் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் ஐபிஎல் தொடரில் இன்னும் பந்துவீசாமால் இருக்கிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து இவரை நீக்கவிட்டு ஷர்தூல் தாகூர் அல்லது தீபக் சஹாரை சேர்க்க வேண்டும் என பலர் கூறி வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், அவசர அவசரமாகக் கூடிய பிசிசிஐ மீட்டிங்கில் இதுகுறித்து விதிக்கப்பட்டிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஹார்திக் பாண்டியா மட்டுமல்ல பெரியதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் சஹார், சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். 

இதனால், அவர்களுக்கு பதிலாக பதிலாக மீண்டும் ஷிகர் தவன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை சேர்ப்பது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் விவாதித்திருக்கிறார்கள். அணியின் வெற்றிதான் முக்கியம். சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கொடுக்க வேண்டும். மற்றவர்களை நீக்க, எவ்வித பாரபட்சமும் பார்க்க கூடாது என சில நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான அணியில் மாற்றம் செய்ய நாளை மறுநாள்தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை