ஒரே போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் ஹூப்லி அணி வெற்றி!

Updated: Sat, Aug 24 2024 11:30 IST
Image Source: Google

கர்நாடகாவில் நடைபெற்றுவரும் மஹாராஜா கோப்பை டி20 லீக் தொடரின் நடபாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹுப்லி டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹுப்லி டைகர்ஸ் அணியானது 10 ஓவர்கல் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மனீஷ் பாண்டே 33 ரன்களையும், முகமது தஹா 31 ரன்களையும், அனீஷ்வர் கௌதம் 30 ரன்களையும் சேர்த்தனர். பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி தரப்பில் லவிஷ் கௌஷல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியில் கேப்டம் மயங்க் அகர்வால் அரைசதம் கடந்து அசத்திய கையோடு 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்து போட்டியை சமன்செய்தது. ஹுப்லி டைகர்ஸ் அணி தரப்பில் மன்வந்த் குமார் 4 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரெப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இப்போட்டியானது சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. 

இதனையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 10 ரன் எடுத்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணியும் 10 ரன்களை மட்டுமே எடுத்ததன் காரணமாக, இப்போட்டியானது மீண்டும் சமனில் முடிந்ததுடன், மீண்டும் இரண்டாவது முறையாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஹூப்ளி டைகர்ஸ் அணியால் 8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

 

இதைத்தொடர்ந்து 9 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 8 ரன்களை மட்டுமே எடுத்ததன் காரன்மாக இப்போட்டி மறுபடியும் சமனில் முடிந்தது. இதையடுத்து கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியின் முடிவை எட்டுவதற்காக 3ஆவது சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மூன்றாவது சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 12 ரன்களைச் சேர்த்து, 13 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதையடுத்து 13 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹூப்ளி டைகர்ஸ் அணியானது சூப்பர் ஓவரின் முடிவில் இலக்கை எட்டியதுடன், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள் நடைபெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை