Hubli tigers
மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
கர்நாடகாவில் நடைபெற்றுவரும் மகாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் ஹுப்லி டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹுப்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணிக்கு எஸ் யு கார்த்திக் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய கார்த்திக் 6 ரன்களுக்கும், கேப்டன் கருண் நாயர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கார்த்திக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் 26 ரன்களுக்கும், சுமித் குமார் 18 ரன்களுக்கும், மனோஜ் 26 ரன்களுக்கும், ஹர்ஷில் தார்மனி 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. ஹுப்லி அணி தரப்பில் எல்ஆர் குமார் 3 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரெப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Hubli tigers
-
ஒரே போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் ஹூப்லி அணி வெற்றி!
மஹாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹூப்லி டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முடிவை எட்ட மூன்று சூப்பர் ஓவர்கள் பயன்படுத்தப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47