IND vs AUS, 4th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இந்திய அணி அதிரடி தொடக்கம்!
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது.
அதன்பின் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடவங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணியினர் விக்கெட் எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டனர். உணவு இடைவேளை வரை இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. மிகச் சிறப்பாக விளையாடி நேற்று சதம் அடித்த உஸ்மான் கவாஜா 150 ரன்கள் கடந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். கேமரூன் கிரீன் தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதலாவது சதத்தை இன்று பதிவு செய்தார்.
ஐந்தாவது விக்கெட்க்கு ஜோடியாக உஸ்மான் கவஜா மற்றும் கிரீன் ஆகியோர் 208 ரண்களை சேர்த்தனர் . சிறப்பாக விளைடாடிக வந்த கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து அதே ஓவரில் அலெக்ஸ் கேரி விக்கெட்டையும் வீழ்த்தினார் அஸ்வின் . பின்னர் சில ஓவர்கள் கழித்து மிச்சல் ஸ்டார்க் விக்கெட்டும் அஸ்வின் வசம் வீழ்ந்தது. இதனால் 378 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என இருந்த ஆஸ்திரேலியா 387/7 என சரிவை சந்தித்தது.
விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்து கொண்டே இருந்தாலும் மறுமுனையில் நங்கூரம் இட்டு ஆடிக்கொண்டிருந்தார் உஸ்மான் கவாஜா. டீன் ஜோன்ஸ் மற்றும் மேத்யூ ஹேடன் ஆகியோருக்குப் பிறகு இந்திய மண்ணில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 180 ரண்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் எல்பி டபிள்யு ஆகி வெளியேறினார்.
இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த லையன் மற்றும் டாப் மார்ஃபி ஜோடியும் இந்திய அணியை சோதித்தது. இவர்கள் இருவரும் இணைந்து ஒன்பதாவது விக்கெட்க்கு ஜோடியாக 70 ரண்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்தது. 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாட் மர்பி அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து நேதன் லையன் 34 ரன்கள் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அவுட் ஆனது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சமி இரண்டு விக்கெட்டுகளும் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கட்டும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா இன்றைய ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இரண்டாவது நாள் ஆட்டத்தை முடித்தது இந்தியா. கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் சுப்மண் கில் 18 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 444 ரன்கள் பின்தங்கி உள்ளது