4th Test Day 3: சதத்தை தவறவிட்ட துருவ் ஜுரெல்; 307 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்த, முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.
இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்கள் சேர்த்த நிலையில் சோயப் பஷீர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி கொடுத்தர்.
பின்னர் களமிறங்கிய துரூவ் ஜுரெல் குல்தீப் யாதவ் இணை தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை துருவ் ஜுரெல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப்பும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தனார். இருப்பினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துருவ் ஜுரெல் பவுண்டரியும் சிக்சருமாக விளாச தனது முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 6 பவுண்டரி, 4 ரன்கள் என 90 ரன்களை எடுத்த நிலையில் டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 10 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இந்திய அணி 307 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.