ரிஷப் பந்தை முட்டாள் என்று திட்டிய சுனில் கவாஸ்கர் - வைரலாகும் காணொளி!

Updated: Sat, Dec 28 2024 11:08 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில்  5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். மேற்கொண்டு நிதீஷ் ரெட்டி சதத்தை நோக்கியும், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தை நோக்கி விளையாடி வருகின்றனர். இந்நிலியில் இப்போட்டியில் ரிஷப் பந்தின் ஷாட் தேர்வு குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. 

ஏனெனில் இந்திய அணி கட்டாயம் ஃபலோ ஆனை தவிர்க்க போராடிய சமயத்தில் ரிஷப் பந்த் தனது ஸ்கூப் ஷாட்டை விளையாடி பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் வர்ணையாளராக செயல்பட்டு வரும் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நேரலையின் போதே ரிஷப் பந்தின் ஷாட் தேர்வை விமர்சித்ததுடன் அவரை முட்டாள் என்றும் திட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "முட்டாள், முட்டாள், முட்டாள்! உங்களுக்காக அங்கு இரண்டு பீல்டர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் நீங்கள் அதே ஷாட்டை மீண்டும் விளையாடியுள்ளீர். ஏற்கெனவே நீங்கள் அந்த ஷாட்டை விளையாட முயன்று தவறவிட்டீர்கள், நீங்கள் எங்கு சிக்கிக்கொண்டீர்கள் என்று பாருங்கள். இது நீங்களே உங்களது விக்கெட்டை வேண்டும் என்றே இழக்க வேண்டும் என்பதற்காக விளையாடியது போல் தோன்று கிறது.

Also Read: Funding To Save Test Cricket

இதனை உங்கள் இயல்பான விளையாட்டு என்று சொல்ல முடியாது. மன்னிக்கவும். இது உங்கள் இயல்பான விளையாட்டு அல்ல. அது ஒரு முட்டாள்தனமான ஷாட். இது உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது. நிலைமையையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இப்படி விக்கெட்டை இழந்த பின்னர் அந்த (இந்தியாவின்) டிரஸ்ஸிங் ரூமுக்குப் போகக் கூடாது, வேறு டிரஸ்ஸிங் ரூமுக்குப் போக வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை