நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்று - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் லபுஷாக்னே - கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டனர். இதில் லபுஷாக்னே 70 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 41 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் நாதன் லையனும் தனது பங்கிற்கு 41 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களையும், ரிஷப் பந்த் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
இந்நிலையிக் இப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி, நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இதனை கருதுகிறேன். வாரம் முழுவதும் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் ஆச்சரியமாக இருந்தது. அதேசமயம் இந்த போட்டியில் மார்னஸ் இரண்டாவது இன்னிங்ஸ் பெரிய நேரத்தில் எனக்கு உதவினார். மேலும் அணியின் வெற்றியில் பங்களிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த போட்டியில் ஸ்டீவின் அற்புதமான இன்னிங்ஸ், டாஸ் வென்றது, முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எட்டுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
எங்கள் கீழ்-வரிசை பேட்டிங்கில் நாங்கள் நிறைய வேலை செய்கிறோம், முதலில் எதிரணி பேட்டர்களுக்கு எப்படி சிறந்த முறையில் பந்து வீசுவது என்பதில் நாங்கள் நிறைய உழைக்கிறோம், ஆனால் அதேசமயம் நாங்கள் பேட்டிங்கிலும் பங்களிப்பை வழங்கி வருகிறோம். மேற்கொண்டு இந்த போட்டியில் நாங்கள் டிக்ளர் செய்யாமல் இந்திய அணியின் வெற்றியை தடுப்பதற்கான முயற்சியில் இறங்கினோம். மேலும் நாங்கள் ரன்களைச் சேர்பதற்கு எங்களிடம் தேவையான விக்கெட்டுகளும் இருந்தன. அதன்பின் ஓவர் ரேட்டில் நாங்கள் சற்று பின்தங்கியிருந்தோம்.
Also Read: Funding To Save Test Cricket
எனவே டிராவிஸ் ஹெட்டை பந்துவீச அழைத்தால் அது எங்களுக்கு உதவக்கூடும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே முக்கியமான கட்டத்தில் ரிஷப் பந்தின் விக்கெட்டை கைப்பற்றி அவர் எங்களுக்கு ஒரு வழியை உருவாக்கினார். இந்த வெற்றியின் மூலம் மொத்த அணியுன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளோம். சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாங்கள் இந்த வெற்றியை கொண்டாட விரும்புவதுடன், இதே உத்வேகத்துடன் அப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.