ENG vs IND, 5th Test: இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி!

Updated: Thu, Sep 09 2021 18:14 IST
Image Source: Google

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் நாளை மான்செஸ்டாரில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா உறுதியாகியிருக்கிறது.

முன்னதாக 4ஆவது டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் மூவருடன் ஃபிசியோ நிதின் படேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

நாளை கடைசி டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்திய  வீரர்கள் உட்பட அணி நிர்வாகத்தை சேர்ந்த யாருமே ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், கடைசி டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் சில வீரர்கள் கலந்துகொண்டதுதான் கரோனா பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால் அடுத்தடுத்து வீரர்களுக்கு தொடர்ச்சியாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::